Filtering & Search
பள்ளி ஆசிரியருக்கான ஆலோசனைகள்
AUTHOR NAME : க.ப. சுகந்தி எம்.பி.ஏ.,
PAGES : 192
க.ப. சுகந்தி, எம்.பி.ஏ., நான் சென்னை பல்கலைக்கழகத்தில் எம்.பி.ஏ. முடித்து, டிசைனிங் கற்றுள்ளேன். சென்னையில் பிறந்து வளர்ந்த நான், அரசு பள்ளியில் பயிலும் போது பள்ளிப்பருவத்தில் விளையாட்டுத்தனமாக சிறு கவிதைகள், கட்டுரைகள், கதைகளும் எழுதி என் நண்பர்களிடத்தில் கொடுக்கும்போது, அவர்கள் கொடுத்த உற்சாகமும், ஆதரவும் வார, மாத இதழ்களுக்கு கட்டுரைகள், துணுக்குகள் எழுதி அனுப்ப வைத்தது. அனுப்பிய கட்டுரைகளும், துணுக்களும் அச்சிட்டு இதழ் வடிவில் என் கையில் தவழும்போது தான் எனக்கு தோன்றியது நாமும் பத்திரிக்கை துறையில் பணிப்புரிய வேண்டும் என்று. அதன் விளைவாக தான் என் கணவருடன் சேர்ந்து வணிக கதிர், மாணவ கதிர், மகளிர் கதிர் ஆகிய பத்திரிக்கைகளில் ஆசிரியராக கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேல் பணியாற்றி வருகிறேன்.

